Thursday, January 26, 2012

Mugam

உன் முகம் பார்க்கும்
ஒவ்வொரு தருணமும்
ஆறாய் கண்ணீர் என் கண்களில்!

உன் அழகில்
கண் சிமிட்ட மறப்பதால்!

Living Place

நான் மழையில் நனைந்தால்!
உன் கூந்தல் தேவை
என் விழி மழையை துடைக்க!
உன் விரல்கள் தேவை!
என் காயம் ஆற்ற!
உன் தொடுதல் வேண்டும்!
என் உறக்கம் துவக்க!
உன் தழுவல் வேண்டும்!
நான் சோர்வில் சாய்ந்தால்!
உன் மடி வேண்டும்!
.
.
.
.

என் வாழ்வை வாழ!
உன் இதயத்தில் இடம் வேண்டும்!

Vikkal

விடாமல் மூச்சு திணற விக்கல் வந்தும்!
மகிழ்ந்து அனுபவித்தேன்!
.
.
.
.
.
.
.
.
நினைப்பது நீயாகத்தான் இருக்கும் என நினைத்து!

Book

என் வாழ்வென்ற புத்தகத்தில்!
அனைத்து பக்கங்களிலும் நீ இல்லைதான்!
ஆனால்!

எல்லா பக்கங்களையும்
இணைக்கும் நூல் நீதான்!
நீ இல்லை எனில்!
என் வாழ்வெனும் புத்தகம் இல்லை!
வெறும் பக்கங்கள்தான் மிஞ்சும் தனி தனியாக!

Kaneer

என்னவளின் காலில் காயம்!
அவள் பாதத்தை அருகே பார்த்தேன்!
.
.
.
.
.
.
என் இதயத்திற்கு எப்படி தெரியும்!
உப்பு தண்ணிர் பட்டால் காயம் குணமாகும் என்று!
என் கண்களின் வழியே அவள் கால்களை நனைக்கிறதே!

Inner

உன்னை!
எந்த உள் நோக்கத்துடனும்
காதலிக்க ஆரம்பிக்கவில்லை!
ஆனால் இன்று!



உன்னை கைப்பிடிப்பதை
தவிர!
வேறு எந்த நோக்கமும் உள்ளத்தில் இல்லை!

Bird

வாழ்க்கை எனும் வானில்
ஜோடி தேடி!
ஒற்றை பறவையாய் நான்!
என் இதயத்தில்!
காதல் எனும் அம்பு தைத்தது!
விழுந்தேன்!
நீ வாழும் கூட்டிற்குள்

Life Tree

உன்மேல்!
காதல் கொண்ட நொடி முதல்!
உனக்குள் புதைந்தேன்!
அன்று!
துளிர் விட்டு!
பின்பு!
செடியாகி! மரமாகி!
பூத்து குலுங்கி!
நேற்று!
காய் காய்த்து!
இன்று காதலில் கனிந்து!
கனியானேன்!
அன்பே!
நீ!
என்னை வெட்டி ருசிக்கலாம்!
ஆனால்!
ருசித்தபின்!
விதையை மீண்டும் உன்னுள் அன்பாக புதைத்து விடு!
மறுபடியும் வளர்வேன்!
காதலுடன்! நம் காதலுடன்!

LCD

தொட்டால்!
குழையும் உன் முகம் பார்த்துதான்!
LCD கண்டுபிடித்தார்களோ!
தொட்டால் நீர் குமிழி போல் குழைகிறதே!

Make-up

காற்றில் கலைந்து!
திட்டு திட்டாய் மாறிய!
உன் முகப்பூச்சு கூட!
அழகாய்தான் தெரிகிறது!
வானத்தில் மிதக்கும் மேகம் போல!

Weakness

காலமெல்லாம் தனிமையில் காத்திருக்க கூட!
பலம் கொடுக்கும்!
காதல்தான்!
ஒரு நொடி பிரிவை கூட
தாங்க இயலாத அளவு,
நம் மனதை பலவீன படுத்துகிறது..

Romantic..

அழகான முன்னிரவு நேரம்!
கூடு திரும்பும் பறவைகளின் கொஞ்சல் ஓசை!
உடலை ஊடுருவி செல்லும் தென்றல்!
காதல் சொல்லி காயும் நிலவு!
நானும் அவளும் தனிமையில்!
...அவள் கை பிடித்து முகம் பார்த்து!
உன்னை காணும்போது!
என் மூளைக்குள் பூ பூக்கிறது என்றேன்!
அவள்...
என்னை நெருங்கி!
கண்களை நோக்கி!
காதலுடன்!
.
.
.
.
.
.
.
.போடா "மரமண்டை" என்றால்...! ;)

Rain

அடை மழையில்!
ஆனந்தமாக நடந்து வந்தும் - நனையவில்லை!
உன் மனம் என்னும் குடிலில் வசிப்பதால்!

Lovers day

நீயும் நானும்!
கருவில் இருந்து பிறந்த தினம் வெவ்வேறுதான்!
ஆனால்!
காதல் எனும் கருவில்!
ஒரே நாளில் ஒன்றாக உயிர் பெற்றோம்!
ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினமே!
இன்றும்தான்!
இன்று ஒருநாள் மட்டும்!
உலக காதலர்களுடன் கொண்டாடுவோம்!
Happy valentine's Day to all.... by us..;)

Mirror

நிறமற்ற வானத்தில்!
கலர் கலராய் விண்மீன்கள்!
என்னவள் வீட்டு கண்ணாடியில்!
அவள் நெற்றி பொட்டுக்கள்!

Black & White

"வண்ண வண்ண மீன்கள், பல கடந்து நீந்தி வந்தேன்! ஆனால்! உன் கருப்பு வெள்ளை மீன்களில் சிக்கி கொண்டேன்! மீன் கண் கொண்டு! .

kangal..

என் கண்களில்!
உன்னை பார்த்த நாள் முதல்!
நீயே நிறைந்து இருக்கிறாய்!
மகிழ்ச்சியில் ஒளியாகவும்!
அழுகையில் கண்ணீராகவும்!

Puratchi

ஏப்ரல்! மேயிலே!
பசுமை ஏன் இல்லே!
என்ற!
பழைய இளையராஜாவின் தாகத்தை!
தணித்தது!
BPO கம்பெனிகளின்!
பசுமை புரட்சி!

Periya meen

சிறு மீன்கள் ஓட!
விட்டு விட்டு ! பெரிய மீனுக்கு காத்திருக்குமாம்!
கொக்கு!
அது போல!
விலை உயர்ந்த ஆபரணங்கள்!
மணி மாலைகள் சூடியும்!
நான் கட்டும் மாங்கல்யத்திற்கு
ஏங்கி! மணமேடையில் நீ!

paadal

விடி காலை வேலையில்!
நல்ல உறக்கம்!
திடீரென எங்கோ!
குயில்கள் கூவும் ஓசை!
மங்கள வாத்திய முழக்கம்!
ஒட்டு மொத்தமாய் இனிய குரல்களில் பாடல்!
ரம்யமான இசை கற்றைகள்!
மெல்ல கண் விழித்து பார்த்தேன்!
எந்தன் செல்போன் சிணுங்கி கொண்டிருந்தது!
உனக்காக வைத்த பாடல் கொண்டு!

madathanam

விண்ணில் சென்று!
விண்மீன் கொண்டு வந்தேன்!
வேண்டாம் அன்பே என்றாய்!
சுட்டெரிக்கும் சூரியன் கொண்டு வந்தேன்!
குளுமை பூக்கும் நிலவு கொண்டு வந்தேன்!
அனைத்தையும் உதறி தள்ளினாய்!
கோபம் கொண்டு வினவினேன்!
என்னதான் வேண்டும் உனக்கு என்று!
நீ வாழும் வீடும் நான் வாழும் உன் மார்பும் போதும் என்றாய்!
கண்ணீர் துளித்தேன்! என் மடதனத்தை எண்ணியவாறு!

Lens

உன் கண்களில்! காதலாய்! காதலனாய் நான்! இருந்தும் கண்ணீர் வருகிறதே! contact lensku காதல் தோல்வியாம் !

Kadamai

காலையில் எழுந்து கைகளை பார்த்தேன்
சுட்டு விரல் அழுக்காய்தான் தெரிந்தது! ஆனால் !
கடமையை செய்த அழகான குடிமகன் நீ என உணர்த்தியது!

Aluval

கொட்டும் மழைக்கு பயந்து
வண்டியை நிறுத்தி விட்டு கடையோரம் ஒதுங்கினேன்!
மழை கொட்டு அணிந்து இருந்தும் மனதில் சிந்தனை!
வேளைக்கு போகலாமா வேண்டாமா என்று!
தெரு முனை டீ கடையில் இருந்து
ஒரு சிறுவன்
சாக்கு பை போர்த்தி கொண்டு
கொட்டும் மழையில் நடந்து வந்தான்
நான் நின்ற கடைக்கு டீ கொடுப்பதற்கு!

.
.
.
.
மௌனமாய் சாலையில் இறங்கி வண்டியை நகர்த்தினேன் அலுவலகத்தை நோக்கி!