Friday, June 13, 2014

கடற்கரை சுத்தம் செய்வோம் வாருங்கள்




கடற்கரை சுத்தம் செய்வோம் வாருங்கள்(Chennai Coastal Cleanup) என்று Chennai Trekking Club என்னை அழைத்தது!

மன்னிக்கவும் குழுவின் சார்பாக நாங்கள் உலகை அழைத்தோம்!

இந்த குழுவில் குடி கொண்ட நாள் முதல், வாழ்க்கை சற்று மாற்று வழியில் என்னை செலுத்தியது!

மாதம் ஒரு மலை! வாரம் பல மரம்! இதுதான் இப்பொழுது நான் பயணிக்கும் பாதை!

குறுகிய காலமே ஆனாலும் இந்தகுழுவின் குறிக்கோள் என் மனதிலும் ஒட்டி கொண்டது!

இவர்கள்!!! இங்கு இருக்கும் இவர்களே, இந்த இயற்கை தாயை பேணி போற்ற வந்த செல்ல பெருமக்கள் என்றே நினைத்து வியந்தேன் ஒரு சமயம்!

இயற்கை அனைவருக்கும் தாய்தான்! மனதும் நேரமும் இருந்தால் பெற்ற கடனை பேணி திரும்பி செலுத்த இயலும் என்பதை விரைவில் உணர்ந்தேன்!

இந்த சுத்தம் செய்யும் பணியால் ஒரே நாளில் குப்பையை ஒழிக்க முடியாது என்று, இதில் ஒருங்கிணைந்து வேலை செய்தவர்களுக்கும் என்னை போல் ஒட்டி கொண்டவர்களுக்கும்  நன்றாகவே தெரியும்!

நாங்கள் ஒழிக்க ஒன்று கூடியது குப்பைகளை மட்டும் அல்ல! பொது இடங்களில் குப்பை போட வேண்டும் என்ற மன நிலையை!

எந்த ஒரு மாற்றமும் தனி மனிதனிடம்தான் தோன்ற வேண்டும் என்ற நியதிக்கு ஏற்றார்போல, ஒற்ற சிந்தனையுள்ள உள்ளங்களை சேர்க்கும் பணியை எங்கள் தலைமை நன்றாகவே செய்தது!

சிவா, மாசு, நம்பி, பிரபாகர்(பெயர் விட்டு போயிருந்தால் மன்னிக்கவும்) என ஒரு கூட்டமே ஓய்வுறக்கம் ஊதியம் ஏதும் இன்றி ஒரு மாதத்திற்கும் மேலாக இதற்காக பாடுபட்டு, ஒவ்வொரு உபயத்தார்(Sponsor) அலைபேசிகளையும் கொன்று எடுத்து, ஒவ்வொரு பெறு நிறுவன கூட்டமைப்பை(Corporate Groups) கலந்து ஆலோசித்து, தன்னார்வ தொண்டு நிறுவங்களின்(NGO) ஆர்வத்தை தூண்டி விட்டு, கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிகையை பல மடங்கு எகிற செய்தோம்!

எல்லாவற்றிற்கும் மேல் இந்த வருட கருப்பொருள் "மறுசுழற்சி" (Recycle), குப்பைகளை எடுத்து புகைப்படம் எடுத்து கொண்டு மீண்டும் குப்பை மேட்டில் எறியும் நோக்கம் எம்மிடம் இல்லை என்பதை உணர்த்த நாங்கள் எடுத்த ஆயுதம் "மறுசுழற்சி".

முதலில் எவ்வளவு குப்பை வரும் என்று புரிதலோடு கணக்கெடுக்க வேண்டும்! பின்பு அவ்வளவு குப்பைகளையும் கையாளும் திறன் கொண்ட நம்பகத்தன்மையுள்ள தனியார் மறுசுழற்சியாளர்களை கண்டுபிடிக்க வேண்டும்!

தலைமை உறுப்பினர்களால் அந்தந்த பகுதிகளுக்கு மண்டல தலைவர்களும்(Zone Leads), அவர்களுக்கு துணை தலைவர்களும்(Sub Leads) நியமனம் செய்து அவர்களை தத்தமது மண்டலங்களில் ஆய்வு மேற்கொண்டோம்! 

மண்டல தலைவர்களின் சிறப்பான பணியால் 50 டன் எடை குப்பைகள் கிடைக்கும் என்றும், இந்த இடங்களுக்கு இவ்வளவு நண்பர்கள் பங்களிப்பு வேண்டும் என்றும் திட்டம் போட்டோம்!


தோராய மதிப்பு 50 டன் என்று தெரிந்த பின்பு மறுசுழற்சியாளர்கள் தேடும் பணி தொடங்கி பல பேருடன் பேச்சுவார்த்தை சென்று கடைசியாக "Earth Recycler" என்ற நபருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு மற்ற பணிகளுக்கான முயற்சிகள் முன்னோக்கி எடுத்து செல்லப்பட்டன.

இந்த அருமையான நிகழ்வுகளை பதிவு செய்ய புகைப்பட தலைவர்கள்(Photography leads) எல்லா மண்டலத்திற்கும் நியமிக்கப்பட்டனர்.

 

மறுசுழற்சியாளர்களுக்கு உதவுவதற்காக குப்பைகளை அள்ளும்போதே 3 வகையாக பிரித்து அள்ளுவது என்று முடிவு செய்தோம், 1) பிளாஸ்டிக் (எல்லா வகையான பிளாஸ்டிக் குப்பைகளும்) 2) கண்ணாடி ( உடைந்த கண்ணாடி துகள்கள் மற்றும் முழு கண்ணாடி குடுவைகள்) 3. மற்றவை (முதல் இரண்டு பிரிவில் சேராத யாவும்)


குப்பைகளில் மணல் அதிகம் இருக்குமானால் மறுசுழற்சி முறை தாமதம் மட்டும் இன்றி செலவும் பிடிக்கும் எனவே முடிந்த வரை மணல் அன்றி குப்பையை பிரிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

இந்த குப்பை ரகம் பிரிக்கும் வேலைக்கு என்று மண்டலத்திற்கு சில இயற்கை தலைவர்கள்(Green Leads ) நியமிக்கப்பட்டனர். நானும் மெரினா கடற்கரையில் ஒரு கிரீன் லீட்  அக நியமனம் செய்யப்பட்டேன்.

அனைத்து தலைமை நண்பர்களுக்கும்(Leads) கலந்துரையாடல்களும், புரிந்துணர்வு கூட்டங்களும் நடைபெற்றன.

ஜூன் 7ம் திகதியே பீட்டர் இல்லம் நிரம்பி வழிந்தது, ஒவ்வொரு மண்டலத்திற்கும் எடுத்து செல்ல வேண்டிய பழங்கள், சிறிய மற்றும் பெரிய பைகள், கையுறைகள்(gloves) அனைத்தையும் எடுத்து பிரித்து வைத்து விட்டு, பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வுக்காக நடைபெற்ற வார்த்தை வசனம் அற்ற நாடகம்(MIME Show ) கண்டு களித்தோம்.

ஜூன் 8ம் திகதி காலை 4 மணிக்கு நானும் எனது நண்பன் உதயா(both are green leads) உடன் மெரினா கடற்கரை அடைந்தோம், எனது மண்டல தலைவர் யுவ்கோகுல் எல்லாவற்றையும் முன்னதாக வந்து தயாராக வைத்து இருந்தார். 


நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மற்ற நண்பர்கள் வர ஆரம்பித்து 6 to  6:30 போல எனது உயர் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு அருகில் கூட்டாக உறுதிமொழி எடுக்க துவங்கினோம்!

PLEDGE:

Ø I pledge to get a reusable water bottle while going out.

Ø I pledge that I won’t not to throw any items like bus tickets, water bottles, chocolate 

wrappers, ice cream covers,etc on public places Like Beach, Park and Bus stops. I will put 

it only in dustbins.

Ø I pledge to avoid plastic carry bags from now.

Ø I pledge to bring reusable bags while go for shopping.

Ø I pledge to do the segregation in my home itself.

Ø I pledge to plant at least one tree sapling every year and will maintain.

Ø I pledge that this world is not only for humans, it is for all living & non living organisms, 

which I understand & will not spoil the Nature anymore.

Ø I pledge to keep one cloth bag in my bike/car from today.

உறுதிமொழி எடுத்த பின்பு, 
       எதற்காக அங்கு கூடியுள்ளோம் என்றும், 3 வகை குப்பைகளை பற்றியும் எவ்வாறு பிரித்தறிவது பற்றியும் விளக்கினேன்.

பின்பு ஆங்கிலம் அறியாத சிறார்களுக்காக ஆங்கில உறுதிமொழியை தமிழில் மொழிபெயர்த்து மீண்டும் ஒரு முறை உறுதி மொழிந்தோம்!

Ø நான் எங்கு சென்றாலும் திரும்ப பயன்படுத்தகூடிய தண்ணீர் குடுவையை உடன் எடுத்து செல்வேன்

Ø நான் பொது இடங்களில் குப்பை போட மாட்டேன், அதற்குரிய குப்பை தொட்டியில் மட்டுமே குப்பைகளை போடுவேன்

Ø நான் கூடுமானவரை பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டேன்

Ø நான் துணி பைகளை உடன் எடுத்து செல்வேன் 

Ø நான் வீட்டிலேயே குப்பைகளை ரகம் பிரித்து அரசிடம் ஒப்படைப்பேன்

Ø நான் வருடத்திற்கு ஒரு மர கன்றாவது நட்டு அதை பேணி பாதுகாப்பேன்

Ø நான் மனிதர்காக மட்டுமன்றி மற்ற ஜீவராசிகளுக்கும் இந்த உலகம் பொது எனக்கருதி பேணி காப்பேன்


இது முடிந்ததும் அனைத்து நண்பர்களும் உறுப்பினர்களும் தத்தமது பணியை செவ்வனே செய்தனர். முக்கியமாக குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 


வெவ்வேறு வகையான மக்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களுக்கு குப்பை போடாமல் இருப்பதன் முக்கியதுவத்தை எடுத்து சொன்னோம்.. 



சாக்லேட் என்றாலும் அதன் மேலுறையை பத்திரப்படுத்தி குப்பை தொட்டியில் போடுமாறு சிறுவர்களை கேட்டுக்கொண்டோம்!


அவ்வப்போது நேராக அள்ளும் இடம் சென்று அவர்கள் அள்ளும் ரகங்களை தெளிவுபடுத்தினோம்!

9 மணி வாக்கில் குப்பைகள் அள்ளும் பண்ணி முடிவு பெற்று குழு நிழற்பட பதிவு ஆரம்பம் ஆனது,



கலைத்து போன நண்பர்களுக்கு தண்ணீரும், பச்சை வாழைப்பழமும், சப்போட்டா பழமும் வழங்கினோம்.

எல்லாவற்றிக்கும் மேலாக கோகுல் குடுத்த மிகச்சிறந்த யோசனை தேசியகீதத்துடன் நிகழ்ச்சியை நிறைவு செய்வது! அதிலும் ஒலிபெருக்கி இன்றி கூட்டமாய் சொந்த குரலில் ஒரு சேர பாடிய தருணம் இப்பொழுது நினைப்பினும் சிலிர்க்கும்!

பின்பு சிறிய மற்றும் பெரிய பைகளை ரகம் பிரித்து கட்டி லாரியில் ஏற்றினோம்!



மொத்தமாக மெரினா கடற்கரையில் 202 பைகள் நிறைய குப்பைகள் சேகரித்து சில நூறு மக்களின் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்ற மனநிறைவுடன் வீடு திரும்பினோம்!





"உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது பழமொழி,

பிளாஸ்டிக் குப்பையிலே உண்ணும் பண்டம் என்பது நாகரீக புதுமொழி,

பிளாஸ்டிக் எனும் எமனை அரியணையில் ஏற்றி 

வருங்கால மனித சமுதாயத்தின் மீது மட்டும் அன்றி!

கடல் வாழ் புவி வாழ் உயிர்கள் மீதும் விசத்தை ஊற்றுகிறோம்!

கடலும் புவியும் நம் அன்னைகள்! 

முதியோர் இல்லத்தில் சேர்க்காமல், முடிந்தவரை பாதுகாப்போம்!"

 _----_

சாமானியன் மனோஜ் 
https://www.facebook.com/ManuPoems