Saturday, August 2, 2014

டீச்சர் அவன்தான் என்ட பேசுனான் டீச்சர்

டீச்சர் அவன்தான் என்ட பேசுனான் டீச்சர்ன்னு பள்ளி பருவத்தில் ஆரம்பித்து கற்றுக்கொண்டோம் அடுத்தவர் மேல் பழி போடுவதை!

எதற்கெடுத்தாலும் யாரையாவது எதையாவது ஆட்காட்டி விரல் நீட்டி இதுதான் காரணம் என வாழ பழகி கொண்டோம்!

இந்த நாடே லஞ்சம் வாங்கி கேட்டு போச்சுன்னு பேசுவோம், ஆனா அரசாங்க அலுவலகம் போன அரை நாள் எனக்கு வீணா போயிடுமேன்னு உக்காந்த இடத்துல இருந்து வேலை முடிக்க என வழின்னு யோசிப்போம்!

நாலு அஞ்சு புண்ணியவான் இருந்தாலும் அட இருக்கட்டும் சார் புடிங்கன்னு ஒரு கூட்டம் அவனையும் ஆசைகாட்டி லஞ்ச லட்சார்ச்சனைக்குள்ள இழுத்துடுது!

விதி மீறல் ஐயையோ! அதிகாரிங்க சில பேரு தப்பால இவ்ளோ உயிர் போச்சுன்னு சொல்ற எவ்ளோ பேர்.. சிக்னல்ல போலீஸ்  இருக்காரா இல்லையா பாத்துட்டு டூ வீலர்ல பறந்து பாஞ்சு போயிருக்கோம்! நமக்கு முன்னாடி வந்த வண்டி என ஆச்சு பின்னாடி வந்தவன் என்ன ஆனான்னு நின்னு யோசிக்க நேரமில்லை... 

போன வருடம் மட்டும் தமிழ்நாட்டில் 14,504 சாலை விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டு 15,563 உயிர்களை பலி வாங்கியதாக புள்ளி விவரம், 


இவை யாவும் அதிகாரிகள் அல்லது அரசின் செயல்பாடு மீது பழி போட்டு தப்பித்து கொள்வது இயலாத காரியம்.. 

அடிமைதனம் ஒழித்தோம்! ஜனநாயகம் காப்போம் என்று கூறினாலும்! ஜனங்களில் இருந்து மாற்றங்கள் வர நாம் விரும்பவில்லை!

தனி மனித மாற்றங்கள்தான் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை நோக்கி நம்மை உந்தி தள்ளும்!

காலடியில் 
கொட்டி கிடக்கும் சிகரெட் துண்டுகள்,

மேஜை மீதினிலே 
கவிழ்த்து வைக்க பட்ட மது கோப்பைகள்.

கட்டிலின் மேல 
குவிந்து கிடக்கும் கசங்கிய பூக்கள்.

இவைகள் மட்டுமே தனிமனித ஒழுக்கத்தை நிலை நாட்டும் காரணியாம்!


இவையாவும் உத்தமன் செய்யும் காரியம் அல்லவே!

மற்றவர் குடி கெடுத்து மகிழ்ச்சி கொள்பவனும், சுற்றம் உள்ள சூழல் அழித்து சுகம் கொள்பவனும் உத்தமன் அன்றே...


பச்சை பாலகி மீது பால் மோகம் கொண்டு நெருங்குபவனும், இல்லாளை வீட்டில் இறுத்தி வேற்றான் மனைவியிடம்  மையல் தேடிசெல்பவனும் உத்தமன் அன்றே.. 

கடை திறந்து வைப்பதால்தான் குடிகின்றோம், லஞ்சம் வாங்குவதால்தான் தருகிறோம், என்பதெல்லாம் அடுத்தவன் மீது பழி போட்டு நாம் நல்லவன் என காட்டி கொள்ளும் தந்திரமே..!


இவை யாருக்கும் ஆதரவான அல்லது எதிரான பதிவு அல்ல.. புரிதலுக்கான பதிவு, நாகரீகமான விவாதம் வரவேற்கப்படும் 

சாமானியன் மனு

No comments:

Post a Comment