Saturday, January 24, 2015

மசால் தோசையும் 99 ரூவாயும்




தலைப்பு பார்த்துட்டு எதோ புத்தக விமர்சனம் எழுத போறேன்னு தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்! நமக்கு அம்புட்டு இலக்கிய ஞானம் கிடையாது!

மணிகண்டன் என்ற ஒருத்தர் எனக்கு பேஸ் புக் வகையில்தான் தெரியும்.. அதுவும் ரொம்ப பெரிய எழுத்தாளர் உங்க இஷ்டத்துக்கு தெருவுல வந்துள்ள கவிதை பாட மாட்டேனு தைரியமா சொன்னவருன்னு ஒரு பெரிய அறிமுகத்துலதான் அவருக்கு நட்பு அழைப்பு கொடுத்தேன் மனுசனும் அதை ஏற்று கொண்டார்! 

அவர் போடும் நிலைதகவல் முக்கால்வாசி நிசப்தம் என்னும் வலை பூவில் போய்தான் முடியும்.. நானும் நிசத்பமாய் படித்து விட்டு சப்தம் போடாமல் சென்று விடுவேன்!

பாதி நேரம் அவர் போடும் நிலை தகவலை மட்டும் அரை குறையாய் படித்து விட்டு கண்டபடி கமெண்ட் செய்பவர்களையும் அதற்கு மணி சார் தலையில் அடித்து கொண்டு ப்ளாக் முழுசா படிசீங்களா கேக்குறதும் நான் அதிகமா பார்த்தது!


எதுகை மோனை பெரிதாய் இருக்காது! எங்கயோ அகராதியில் தேடி படிக்க வேண்டிய சொற்கள் இருக்காது! ஒவ்வொரு நிகழ்வையும் அவர் எழுதும் விதம் அந்நிய தன்மை இல்லாமல் இருக்கும்! ஏதோ ஒரு டீ கடைக்காரரோ, பஸ் ல பக்கத்துக்கு சீட்ல உக்காந்து பேசிட்டு வர நண்பர் மாதிரியோதான் அவர் கதை பயணிக்கும்.. 

இன்னைக்கும் வரைக்கும் அவர் எழுதுவது அனைத்தும் அவர் சொந்த அனுபவமா இல்ல கற்பனைகளைதான் இவ்ளோ அழகா எழுதுறாருன்னு ஒரு குழப்பம் இருந்துட்டுதான் இருக்கு அதை தெரிந்து கொண்டால் சுவாரசியம் போய்  விடும் அதனால அதை அப்படியே விட்டு விடலாம்! 


மசால் தோசை படிக்கும்போதும் சரி நிசப்தம் படிக்கும்போதும் சரி ஒன்னே ஒன்னுதான் எப்போவும் மனசுல தோன்றி மறையும்! நகரத்துல பிறந்து வளர்ந்ததால்தானோ என்னவோ நமக்கு இத்தனை அனுபவங்கள் கிடைக்கவில்லையோ என்று, ஆனால் படிக்க படிக்க இவர் கதைகள் போல நமது அனுபவங்களும் கண் முன்னே சிறிதாய் நிழலாடி செல்லும்! 

அப்பொழுதெல்லாம் யோசித்து கொள்வேன் நாமும் இந்த மாதிரி எழுதலாமே என்று... யோசிப்பது மட்டுமே நடக்கும் நாம்தான் வாழைபழ சோம்பேறி கூட்டம் ஆயிற்றே தமிழில் டைப் செய்ய தயங்கியே பல முறை தூங்கி இருக்கின்றேன்!



நம்மில் பலர் தலைமுடி நரைத்து தள்ளாடி உட்காரும் காலம்வரை அனுபவங்களை அசை போட்டு பார்ப்பதும் இல்லை.. எங்கோ எதன் பின்னலோ கண் மூடி காற்று வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் நமக்கு அனுபவங்களை நின்று ரசிக்கவும் திராணி இல்லை.. அவ்வப்போது இந்த மாதிரி எளிமையான புத்தங்கள் நம் மனதை மன சாட்சியை கீறி பார்த்து சென்று விடுங்கின்றன.

சல்மான்கான் மற்றும் முஸ்லிம் பெரியவரும் மனதை விட்டு அகல சில நாட்கள் ஆகும் என்றே நினைக்கின்றேன்! 


இந்த புத்தம் சிறந்தது அல்லது இவர் சிறந்த எழுத்தாளர் என்று எடை போடும் அளவு எனக்கு தகுதி இல்லை, ஆனால் வாசகனாய் எனக்கு பிடித்திருந்த காரணத்தால் நேரம் ஒதுக்கி இதை பற்றி எழுத தோன்றியது!

மசால் தோசை எனக்கு பிடித்தது! பசி இருந்தால் நீங்களும் வாங்கி படியுங்கள்!

சாமானியன் மனோஜ்

No comments:

Post a Comment