Tuesday, January 27, 2015

ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தை

ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தை 


சில புத்தகங்கள் படிக்கும்போதுதான், எப்படா நேரம் கிடைக்கும் அந்த மீதி புத்தகத்தை படிக்கலாம் என்ற ஆர்வம் இருக்கும், இது அவ்வகையில் சேர்ந்தது ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தை - The Man-Eating Leopard of Rudraprayag; by Jim Corbett என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம், ஒரு வேட்டைக்காரன் சிறந்த எழுத்தாளனை இருப்பதை பார்க்கும்போது வியப்பாகத்தான் இருந்தது. அல்லது தஞ்சாவூர்க்கவிராயர் மொழி பெயர்ப்பின் இயல்பா என புரியவில்லை, ஒரு ஆட்கொல்லி சிறுத்தையை பற்றியும் அதை வேட்டையாடி மக்களை காப்பாற்றிய விதத்தையும் ஹீரோயிசம் இல்லாமல் விறுவிறுப்பாய் சொல்லியது வாசகனாய் என்னை கட்டி போட்டு கையில் எடுத்த இரண்டே நாளில் புத்தகத்தை படித்து முடிக்கவும் தூண்டியது, சிறுத்தையின் ஆபத்தை விவரித்ததோடு நில்லாமல் இயற்கை விதிகளையும் ஆங்காங்கே விவரித்து வந்ததும் சிறப்பியல்பே!

நூலில் இருந்து,

அந்த விலங்கு செய்த ஒரே குற்றம் - அதுவும் இயற்கைச்சட்டத்துக்கு  எதிரானது அல்ல.
ஆனால் மனிதனின் சட்டங்களுக்கு எதிரானது - அது  மனித ரத்தம் சிந்த காரணமாக இருந்தது என்பதுதான்.
மனிதனை  பயமுறுத்தும் நோக்கமெல்லாம் அதற்கு இல்லை, தான் பிழைத்திருக்க 
வேண்டும் என்று இதை செய்தது..

இதற்கு மேலும் யாரும் இயற்கை வாழ்வின் முறையை தெளிவாக சொல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை!

காட்டின் இடையே வசித்து உணர்ந்த அனுபவத்தை இந்த வாசிப்பு கொடுத்து விட்டது எனக்கு!

எத்தனை discovery சேனல் வந்தாலும் இது போன்ற புத்தக அனுபவம் கொடுக்குமா என தெரியவில்லை! Jim Corbett ன் மீதி புத்தகங்களை தேடி படிக்க முடிவெடுத்துள்ளேன்!


சாமனியன் மனோஜ் 


No comments:

Post a Comment